உலகம்

ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளி மோடி முன்னேற்றம்

rajakannan

உலக அளவில் தலைசிறந்த மூன்றாவது தலைவராக பிரதமர் மோடி திகழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது.

கால்லப் இன்டர்னேஷல் மற்றும் சிஓட்டர் இண்டர்னேஷல் இணைந்து உலக அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. 50 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் முதல் இடத்தை ஜெர்மனியை சேர்ந்த ஏஞ்சலோ மார்கெல், மற்றும் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மாக்ரோன் உள்ளனர். 

இந்தக் கருத்துகணிப்பில் பிரதமர் மோடி 3 வது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10-வது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர்(4), சீன அதிபர் ஜி ஜின்பிங்(5), ரஷ்ய அதிபர் புடின்(6), சவுதி அரசர் சல்மான்(7), இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு(8), ஈரான் அதிபர் ரோஹானி(9) இடங்களை பிடித்தனர்.

இதே அமைப்புகள் 2015 ஆண்டுக்காக நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி 5-வது இடத்தை பிடித்து இருந்தார். இந்த ஆண்டு இரண்டு இடங்கள் அவர் முன்னேறியுள்ளார். கடந்த கருத்துக்கணிப்பில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தை பிடித்து இருந்தார். ஆனால் இந்த முறை டொனால்டு ட்ரம்ப் 10-வது இடத்தில் உள்ளார்.