மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் FB
உலகம்

சீன மண்ணில் பிரதமர் மோடி... எகிறும் எதிர்பார்ப்பு...

தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

PT WEB

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு முறைப் பயணமாக 4 நாட்கள் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி சீனா சென்றார். தியான்ஜின் நகரில் பிரதமர் மோடிக்கு சீன மற்றும் இந்திய உயரதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கூடிய இந்திய வம்சாவளியினர், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பிரதமரை வரவேற்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி

அங்கு சீனக் கலைஞர்கள் அரங்கேற்றிய இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை பிரதமர் மோடி கண்டுவியந்தார். தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். அமெரிக்காவுடன் இந்தியாவிற்கு வர்த்தக ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் சீன பயணம் கவனம் பெற்றுள்ளது.

அத்துடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்தித்து அவர் கலந்துரையாடுகிறார். அப்போது, இருநாடுகள் இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசிப்பார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி

2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா வீரர்கள் மோதிக் கொண்ட பிறகு இருநாடுகள் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையில், பிரதமர் மோடியின் சீனப் பயணம் மீண்டும் இதனை புதுப்பிக்கும் என அரசியல் வல்லுநர்களும் கருதுகின்றனர்.