உலகம்

2018-ன் மிஸ் அமெரிக்காவாக காரா முண்ட் தேர்வு

2018-ன் மிஸ் அமெரிக்காவாக காரா முண்ட் தேர்வு

webteam

2018-ம் ஆண்டுக்‍கான மிஸ் அமெரிக்‍க அழகியாக வட டகோடாவை சேர்ந்த காரா முண்ட் தேர்ந்தெடுக்‍கப்பட்டார்.        

அமெரிக்‍காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 2018ம் ஆண்டுக்‍கான அமெரிக்‍க அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில், அமெரிக்‍காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 51 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், வட டகோடா  மாகாணத்தைச் சேர்ந்த 23 வயதான காரா முண்ட் என்பவர் மிஸ் அமெரிக்‍க அழகியாக தேர்ந்தெடுக்‍கப்பட்டார். அது மட்டுமின்றி தனது மாநிலத்தின் முதல் அழகி எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.