ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் அந்தப் பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. குராஷிகி பகுதியில் வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கியுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெளியேற முடியாமல் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சிலர் தஞ்சமடைந்துள்ளனர். பலரது வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலைகளும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 179 ஆன உயர்ந்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். தாழ்வான பகுதியில் வசித்து வரும் 20 லட்சம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். நில சரிவு மற்றும் வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க, மீட்பு படையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கடும் மழை வெள்ளத்திலும், மனம் தளராமல் ஒரு குதிரை உயிர் தப்பி உள்ளது. அடித்துவரப்பட்ட வெள்ளத்தில் ஒரு வீட்டின் கூரை மேலே நின்று தப்பிய அந்த குதிரை மூன்று நாட்கள் அப்படியே இருந்துள்ளது. பின்பு, இப்போது வெள்ளம் வடிந்தவிட்ட நிலையில் அந்தக் குதிரையை விலங்கியல் ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த 9 வயதுடைய குதிரையை குராஷிகி நகரில் உள்ள வயதானவர்கள் தங்கும் விடுதியில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மூன்று நாட்கள் உயிருக்கு போராடி மீட்கப்பட்ட அந்தக் குதிரையை உரியவர்கள் வந்து மீட்டுச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் குதிரைக்கும் அதன் குட்டிக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்பு, அந்தக் குதிரை மகிழ்ச்சியுடன் சென்றது.