உலகம்

ஜன. 14க்கு பின் விண்டோஸ் 7-க்கான ஆதரவை நிறுத்துகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்

webteam

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7‌ என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு ஆதரவை விலக்கி கொள்வதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பயன்படுத்த எளிதாக இல்லை என்பதால் பலர் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

அதன்படி, வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 மென்பொருளுக்கான ஆதரவை திரும்ப பெறுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.  எனவே விண்டோஸ் 7 வெர்ஷன் மென்பொருளை ப‌யன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப உதவிக்கும், சாஃப்ட்வேர் அப்டேஸ் -க்கும் பாதுகாப்பு சாதனங்களுக்கான அப்டேட்ஸ்-க்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவையும் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.