உலகம்

மெக்சிகோவை அச்சுறுத்தும் மேக்ஸ் புயல்

மெக்சிகோவை அச்சுறுத்தும் மேக்ஸ் புயல்

webteam

மெக்சிகோவை கடந்த வாரம் சக்திவாய்ந்த பூகம்பம் புரட்டிப் போட்ட நிலையில், தற்போது மேக்ஸ் புயல் அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள மெக்சிகோவின் அகாபுல்கோ, இக்தாபா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கனமழை பெய்து வருகிறது. அகாபுல்கோ நகரின் கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள மேக்ஸ் புயல் மணிக்கு 129 வேகத்தில் கரையை கடக்கு‌ம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் பசிபிக் பெருங்கடலில் நார்மா என்ற மற்றொரு புயலும் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது கபோ சான் லுாகாஸில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயலு‌ம் வலுவடைந்து விரைவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.