உலகம்

மெக்ஸிகோ தொடரும் மீட்பு பணிகள்: 60க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு

மெக்ஸிகோ தொடரும் மீட்பு பணிகள்: 60க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு

webteam

மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்ஸிகோ சிட்டியில் தனியார் பள்ளியிலிருந்து 11 பேரும், மற்ற இடங்களிலிருந்து 52 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.