உலகம்

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்ட நாய்

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்ட நாய்

webteam

மெக்ஸிகோவில் கடந்த வாரம் 300க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஃபிரிடா என்ற நாய் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்ட 12க்கும் மேற்பட்டவர்கள் இருந்த இடத்தை காட்டி அவர்களை மீட்க‌ ஃபிரிடா என்ற நாய் உதவியாக இருந்தது. இதனால் சமூக வலைதளத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று நாயகனாக வலம் வருகிறது ஃபிரிடா. உலகெங்கிலும் உள்ளவர்கள், ஃபிரிடாவுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.