அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள சுவரில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சுவரில் கடத்தல்காரர்கள் சிலர் ஏறி போதைப் பொருட்களை கடத்த முயன்றுள்ளனர். அப்போது திடீரென போலீசார் வந்த நிலையில், சுவரில் ஏறி குதித்த கடத்தல்காரர்கள் தங்களுடன் வந்த பெண் ஒருவரை அவசர அவசரமாக சுவரில் ஏற்ற முயன்றனர். போலீசார் அருகே நெருங்கி விட்டதால் தன் குழுவில் உள்ள பெண்ணை சுவற்றின் மீது ஏற்றாமல் பாதியிலேயே விட்டுச் சென்றனர். 15 அடி உயரமுள்ள அந்த சுவற்றில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணை போலீசார் குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.