உலகம்

பிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்

webteam

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இத்தாலி அரசு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. 

சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை ஒப்படைத்துவிட்டு மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள Mycicero என்ற செயலியின் பார்கோடை ஸ்கேன் செய்து, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி இயந்திரத்துக்குள் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் அவர்களுடைய மெட்ரோ பயண அட்டையில் பயணத்துக்கான பணம் ஏறிவிடும். அந்நாட்டின் சுற்றுச்சூழல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.