உலகம்

ஜெர்மனி தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி வெற்றி

ஜெர்மனி தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி வெற்றி

webteam

ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சார்ந்த பழமைவாத கிறிஸ்தவ கட்சி 33 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. 

ஜெர்மனியில், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (63) தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ கட்சியின் ஆட்சி 2005ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 3 முறை அவரது கட்சி, வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது. இதில், பழமைவாத கிறிஸ்தவ கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்க்கல் வெற்றிபெற்றார். அவரது கட்சி 33.2 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அந்தக் கட்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வாக்குகளை விட இது குறைவு. இதையடுத்து மெர்க்கல் 4வது முறையாக ஜெர்மனி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். மேலும் AfD என்ற தீவிர வலதுசாரி கட்சி 13 சதவிகித வாக்குகளை பெற்று வலுவான கட்சியாக நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பது மெர்க்கலுக்கு தலைவலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.