செய்தியாளர் - கார்த்திகேயன்
ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் மீது குறிவைத்து, கொலை செய்வோம் என்று ஈரான் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறிப்பாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மெலனியா ட்ரம்பை கண்காணித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஈரான், உலக சுதந்திரப் போராளிகள் மூலம், அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், மெலனியா ட்ரம்ப் திடீரென மாயமாகிவிட்டாரா என்ற கேள்வி அமெரிக்காவில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.
அதாவது, பொதுவாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் மெலனியா ட்ரம்ப், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கியமான நிகழ்வுகளில்கூட தலை காட்டவில்லை. கடைசியாக, நியூஜெர்ஸியில் நடைபெற்ற FIFA கால்பந்து உலகக் கோப்பை போட்டியைக் காண்பதற்கு, அதிபர் ட்ரம்புடன் மெலனியா ட்ரம்ப் பொதுவெளியில் தலை காட்டியிருந்தார்.
ஆனால், அதன்பிறகு, செனட்டர் லின்ட்சே கிராஹாமின் இறுதிச் சடங்கிலும், வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்திலும், அவ்வளவு ஏன், வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் உடல்களை, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும்கூட, மெலனியா பங்கேற்கவில்லை.
எனவே, ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பான இடத்தில் அவர் தங்கவைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. ஈரானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறோம். மெலனியா ட்ரம்ப் குறித்த ஈரானின் வீடியோ எங்களது கவனத்திற்கு வந்தது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம் என்று, அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரிகள் சமீபத்தில் கூறியிருந்தனர். ஈரானின் ஒரு சிறிய வீடியோ, அமெரிக்க அதிபரின் மனைவியை ஓடி ஒளிய வைத்த சம்பவம், உலக நாட்டினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.