உலகம்

வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு டொமினிக்கா நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

jagadeesh

இந்தியாவில் வங்கி கடன் மோசடி தொடர்பாக தேடப்படும் வரும் குற்றவாளியான வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க டொமினிக்கா நாட்டு உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள மெகுல் சோக்சிக்கு அந்நாட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவரை கட்டுப்படுத்தும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாத சூழல் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. எனவே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் விடுவிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவில் 13,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கிய மெகுல் சோக்சி தப்பியோடி 2018ஆம் ஆண்டு முதல் ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து கடந்த மாதம் மே 23ஆம் தேதி காணாமல் போன அவர், அருகில் இருக்கும் டொமினிக்கா தீவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தனது காதலியை சந்திக்க அங்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கை எதிர்கொண்டிருக்கிறார்.