ஜெருசலேம்
ஜெருசலேம்  முகநூல்
உலகம்

புனித பயணத்தின்போது ஜெருசலேம் நகரில் சிக்கிய மேகாலயா நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பாக மீட்பு!

PT WEB

இஸ்ரேல் - ஹமாஸ் குழு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டு சிக்கிய மேகாலயா நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேகாலயாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வான்வெய்ராய் கார்லுக்ஹி ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டனர். வான்வெய்ராய் உடன் அவரது மனைவி, மகள் உள்பட 27 பேர் புனிதப்பயணம் சென்றனர்.

ஜெருசலேம்

அங்கு திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு படையினர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேலுடன் போர் ஏற்பட்டது. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வான்வெய்ராய் உள்ளிட்ட அனைவரும் இஸ்ரேலில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியர்கள் 27 பேரும் பாதுகாப்பாக எகிப்து எல்லையை வந்தடைந்ததாக மேகாலய முதலமைச்சர் கொன்ராட் சங்மா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரக முயற்சியால் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.