உலகம்

கால்குலேட்டரை விட வேகம்.. - ஹைதராபாத்தைச் சேர்ந்த 20 வயது மாணவரின் அசத்தல் சாதனை

webteam

ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயதான நீலககந்த பானு பிரகாஷ் உலகின் அதிவேக மனித  கால்குலேட்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

அண்மையில் லண்டனில் மென்டல் கால்குலேஷன் வேர்ல்டு சாம்பியன்ஷிப் அட் மைன்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் என்பதின் கீழ் அறிவுச் சார்ந்த போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்றுக் கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலககந்த பானு பிரகாஷ் உலகின் அதிவேக மனித கால்குலேட்டேர் என்ற பட்டத்திற்கான தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். அவர் டெல்லி பல்கலைக்கழகம் ஸ்டீபன் கல்லூரியில் கணிதப்பாடத்தை தேர்வு செய்து பயின்று வருகிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “ நான் உலக அளவில் 4 விருதுகளையும், 50 லிம்கா விருதுகளையும் வென்றுள்ளேன். எனது மூளை கால்குலேட்டரை விட வேகமாக இயங்கும். இந்தச் சாதனைகளுக்கு கணித மேதைகளான ஸ்காட் ஃபிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி ஆகியோரே முக்கிய காரணம். இது தேசத்திற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. உலக அளவில் இந்தியாவை நிலை நிறுத்த என்னால் முடிந்த மட்டும் முயற்சி செய்தேன்.” என்றார்.

லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற எம்எஸ்எம் என்றழைக்கப்படும் போட்டியில் பங்கேற்று உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தை வென்று, இந்தியா சார்பில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளேன்.”  என்றார்.