வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் ai
உலகம்

வங்கதேசத்தில் தீவிரமடையும் தட்டம்மை நோய்.. 1000-ஐ நெருங்கிய குழந்தைகளின் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் தட்டம்மை நோய் தீவிரமடைந்து வரும் நிலையில், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 1000ஐ நெருங்குகிறது..

Rishan Vengai

வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்து, கடந்த மார்ச் முதல் இதுவரை 991 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டாக்கா பிரிவில் மட்டும் 464 மரணங்கள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தொற்றுகள், 19,640க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோய் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை தட்டம்மை மற்றும் அது தொடர்பான நோய் அறிகுறிகளால் 991 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக டாக்கா பிரிவில் மட்டும் 464 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய்

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், சுமார் 19 ஆயிரத்து 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.