உலகம்

ட்விட்டர் கணக்குகளை முடக்கியது 21 வயது இளைஞர்? –மாஸ் ஹேக் பற்றி வெளிவரும் அதிர்ச்சி தகவல்

ட்விட்டர் கணக்குகளை முடக்கியது 21 வயது இளைஞர்? –மாஸ் ஹேக் பற்றி வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Veeramani

கடந்த புதன்கிழமையன்று நடந்த மிகப்பெரிய ஹேக்கிங்கை நடத்தியது 21 வயது இளைஞர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த ஹேக்கிங் மூலமாக  பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அப்பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டன. இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின்  ட்விட்டர்கள்  உட்பல  உலகமெங்கும்  பல  பிரபலங்களின் ட்விட்டர்  கணக்குகளில்  இந்த  ட்வீட்கள்  வட்டமடித்தன .

பிறகு ட்விட்டர் நிறுவனம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும் இதன் மூலமாக பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் வழியாக, $100,000 தொகை ஹேக்கர்களால் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதில் வெட்கப்படுகிறோம், ஏமாற்றமடைந்துள்ளோம், வருத்தம் தெரிவிக்கிறோம் என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

இப்போது இந்த ஹேக்கிங் தாக்குதல் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சைபர் செக்யூரிட்டி குழு கண்டறிந்த தகவல்களின்படி “ ப்ளக்வாக்ஜோ என்ற ஹேக்கர் இந்த பெரிய ஹேக்கிங் தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஹேக்கர் ஏற்கனவே பல இணைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ப்ளக்வாக்ஜோ என்னும் ஹேங்கர் 21 வயதுடைய ஜோசப் ஜேம்ச் கான்னர் என்று அறிய முடிகிறது. லண்டன், லிவர்பூல் என்னும் ஊரை சேர்ந்த இவர் தற்போது ஸ்பெயினில் வசித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த மாபெரும் ஹேக்கிங் பற்றிய முழு விபரங்களையும் திரட்டிவருகிறோம்” என சைபர் செக்யூரிட்டி குழு  தெரிவித்துள்ளது