உலகம்

20,000 ஆண்டு பழமையான ஓவியங்களில் மர்ம குறியீடுகள் - டிகோட் செய்த ஆராய்ச்சியாளர்கள்!

JustinDurai

20,000 ஆண்டுகள் பழமையான கோட்டோவியங்களில் உள்ள மர்ம குறியீடுகள் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களால் டிகோட் செய்யப்பட்டுள்ளன.  

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்தன. பூமியில் இப்படிச் சில பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்த காலத்தை பனி யுகம் என்கிறார்கள். 11,700 வருடங்களுக்கு முன்னர் புவியில் இந்த பனி யுகம் நிலவியது. காலமாற்றத்தின் விளைவாக வெப்பம் பரவத் தொடங்கிய நிலையில் பனி யுகம் முடிந்து மனித நாகரிகம் உருவாகின.

இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள சில குகைகளில் இருந்து 20,000 ஆண்டுகள் பழமையான பனி யுக வரைபடங்களை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வரைபடங்களில் கோடுகள், புள்ளிகள் மற்றும் 'Y' வடிவிலான குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குறியீடுகள் உணர்த்தும் பொருள் என்ன என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ஆராய்ச்சியாளர்களால் டிகோட் செய்யப்பட்டுள்ளது.

அந்தக்காலத்தில் விலங்குகளை வேட்டையாடுபவர்களால் வரையப்பட்டவை குறியீடாக அவை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேம்பிரிட்ஜ் தொல்பொருள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் விலங்குகளின் நடத்தையில் இருந்து அவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்துக்கு மனிதர்கள் எப்போது வந்தார்கள் என்பது தொடர்பான பார்வையை இந்த புதிய கண்டுபிடிப்பு மாற்றியமைக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.