ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி நிம்மதியாக தூங்குவதற்கு ஏதுவாக பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இன்றைய இளைஞர்கள் பலபேரின் தூக்கத்தை சமூக வலைதளங்கள் பறித்து வருகிறது. அந்தவகையில் சிலரோ நாள் முழுக்க ஃபேஸ்புக்கில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி நிம்மதியாக தூங்க பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க் மனைவியான பிரிசில்லா செல்போன் உள்ளிட்ட வேறு ஏதேனும் தொந்தரவு இல்லாமல் சுமூகமாக தூங்குவதற்கு ஏதுவாக இந்த பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பெட்டியானது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மிக மங்கலான ஒளியை வீசும். இந்த நேரமானது, அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் காலை எழும்பும் நேரம் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா நிம்மதியாக எழ முடியும்.
இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென எழும்பி நேரத்தை பார்ப்பது, அதனால் தூக்கம் கெடுவது போன்ற சின்ன சின்ன சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி மனைவியை சந்தோஷமாக தூங்க வைக்க இந்த பிரத்யேக பெட்டியை மார்க் ஜூக்கர்பெர்க் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து மார்க் கூறும்போது, நான் நினைத்ததை விட சிறப்பாகவே இது செயல்படுகிறது எனக் கூறியுள்ளார். அத்துடன் தன் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த பிரத்கேய பெட்டி பிரபலமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.