“இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குள் மெட்டா நிறுவனத்திற்கான Coding-ஐ ஏஐ மூலம் எழுதும் நிலை வரும்” என அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மெட்டா நிறுவனத்திற்கான மென்பொருட்களுக்கான கோடிங்ஸை ஏஐ மூலம் எழுத வைக்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த கோடிங்ஸ் தற்போதுள்ள பெரும்பாலான மென்பொறியாளர்களைவிட சிறப்பானதாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மறுபுறம், மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சமூக தளங்களை விற்பனை செய்யும் நெருக்கடியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் சமூக தளத்தை உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க் அடுத்து இன்ஸ்டாகிராம் தளத்தை 2012ஆம் ஆண்டும் வாட்ஸ் அப் தளத்தை 2014ஆம் ஆண்டும் வாங்கினார். ஆனால், இந்த வணிகத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரசின் வர்த்தக அமைப்பான FEDERAL TRADE COMMISSION நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதில் அரசுத் தரப்புக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் இன்ஸ்டாகிராம், வாட்சப்பை விற்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவார். மெட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் இன்ஸ்டாகிராம்தான் வருவாயை அள்ளிக்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் கைமாறும் பட்சத்தில் அது மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பின்னடைவாக அமைவதுடன் சர்வதேச சமூக ஊடக வணிகமும் பெரும் மாற்றம் காணும் என கருதப்படுகிறது.