சல்வான் மோமிகா எக்ஸ் தளம்
உலகம்

ஸ்வீடன் | குரானை எரித்து போராட்டம் நடத்திய ஈராக் நபர் சுட்டுக் கொலை!

2023ஆம் ஆண்டு ஸ்வீடனில் குர்ஆனை எரித்த மற்றும் முஸ்லிம் நாடுகளின் விமர்சனத்திற்கு ஆளான ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Prakash J

ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் சல்வான் மோமிகா. இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து ஸ்வீடனுக்கு வந்தார். இந்தச் சூழலில், கடந்த 2023-இல் இஸ்லாம் மதத்தினரின் புனித நூல் எனக் கருதப்படும், திருக்குரானை எரித்து அவா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது, இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை ஈராக் வெளியேற்றியது.

மறுபக்கம், சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீது ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை (நேற்று) நடைபெறுவதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் கடந்த ஜனவரி 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.

சல்வான் மோமிகா

இதில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருக்கும் அபாயம் உள்ளதால், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விசாரணையில் தலையிட்டிருக்கிறது” அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

சல்வான் மோமிகா, கிறிஸ்தவ போராளிகளின் தலைவராக இருந்ததாகவும், அவர் ஆயுதக் குழு ஒன்றை வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இஸ்லாத்தை ஒரு அமைப்பாக எதிர்த்துப் போராட விரும்புவதாகவும், அதன் புனித நூலை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வீடியோ ஒன்றில் கூறியிருந்ததாகவும் கூறப்படுகிறது.