உலகம்

துபாய் பணத்தை வீதியில் தூக்கி எறிந்தவர் கைது - லைக்ஸ் மோகம்

துபாய் பணத்தை வீதியில் தூக்கி எறிந்தவர் கைது - லைக்ஸ் மோகம்

webteam

சமூக வலைத்தளங்களில் அதிக பேர் தன்னை பின்தொடரவேண்டும் என்ற ஆசையில் ஒருவர் பணத்தை சாலையில் தூக்கி எறிந்ததாக துபாயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் ஒருவர்  தன்னை சமூக வலைத்தளங்களில் அதிக பேர் பின்தொடரவேண்டும் என்ற ஆசையில் துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் அந்த நபரை தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக துபாய் காவல்துறையின் இயக்குநர் ஃபைசல் குவாசிம், “துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரைக் கண்டுபித்து தற்போது கைது செய்துள்ளோம். அவரை விசாரித்தப்போது அவர் தனை அதிக பேர் பின்தொடர்வேண்டும் என்பதற்காகவே பணத்தை சாலையில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

துபாய் நாட்டின் சைபர் கிரைம் சட்டத்தின்படி வதந்திகள் பரப்புபவர்கள் மற்றும் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சட்டத்தின்படி இவ்வாறு வீடியோ பதிவு செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை அளிக்கப்படும்.