உலகம்

பாறையினுள் குடிபுகுந்த விநோத மனிதர்...

பாறையினுள் குடிபுகுந்த விநோத மனிதர்...

webteam

பிரான்ஸில் பெரிய பாறையினுள் தங்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திய விநோத மனிதர் அதனுள் குடிபுகுந்துள்ளார்.

ஒரு வார காலத்திற்கு பாறையினுள்ளேயே வசிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விநோதமான நடவடிக்கைகளுக்கு பேர் போன ஆப்ரகாம் போய்ன்சேவல் என்ற இந்த மனிதர், பெரிய பாறையை தேர்வு செய்து, அதனுள்ளே ஒரு மனிதன் தங்கும் அளவு செதுக்கி, உணவு பொருட்களை வைக்கவும் இடங்களை உருவாக்கியுள்ளார். காற்று வந்து செல்லும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரீஸ் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பாறையினுள் குடிபுகுந்த ஆப்ரகாம் போய்ன்சேவல் ஒரு வாரத்திற்கு இதிலிருந்து வெளியேற மாட்டாராம். முன்னதாக இதே நபர் கரடி சிலையினுள் இது போன்ற அமைப்பினை ஏற்படுத்தி இரண்டு வாரங்கள் தங்கி இருந்தார்.