உலகம்

கென்யாவில் விவசாயி கொலை: கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அபாயம்

கென்யாவில் விவசாயி கொலை: கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அபாயம்

webteam

கென்யாவில் அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்னையில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பழங்குடியின மக்களிடையே மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள கொகுடா கிராமத்தில் லுவோ மற்றும் களன்ஜின் என்ற இரு சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். லுவோ சமுதாயத்தினர் கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரெயிலா ஒடிங்காவுக்கு ஆதரவு தெரிவித்து அண்மையில் நடந்த அதிபர் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் கொகுடாவில் உள்ள கரும்பு வயலில் 64 வயது விவசாயி ஜார்ஜ் உடும்பே என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அம்புகள் தொடுத்து அவர் கொல்லப்பட்டதை அடுத்து களன்ஜின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இரு சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.