இலங்கை தலைநகர் கொழும்பில் நீதிமன்றத்திற்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் உயிரிழந்தார்.
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கனேமுல்ல சஞ்சீவ என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி நீதிமன்ற வளாகத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நீதிபதி போல் வேடமிட்டு வந்த நபரே இந்த கொலையை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.