உலகம்

ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து: பாக். இளைஞருக்கு மரண தண்டனை

ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து: பாக். இளைஞருக்கு மரண தண்டனை

webteam

ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறு கருத்தினைப் பதிவிட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப்  மாகாண தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 

ஒகாரா பகுதியைச் சேர்ந்த டைமூர் ராசா என்பவர் இஸ்லாம் மதம் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு  கருத்துகளைப் பதிவிட்டதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை  பஞ்சாப் மாகாணத்தின் பஹவால்பூர் மாவட்ட தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  ராசாவின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, அவருக்கு மரண தண்டனை  விதித்து நீதிபதி ஷபீர் அகமது உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப்  பரப்பியதாக ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது பாகிஸ்தானில் இதுவே  முதல்முறையாகும். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் இஸ்லாம் மதத்தை  பின்பற்றும் நிலையில், மதம் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க்கப்படுகிறது.