உலகம்

டிப்டாப் ஓல்டு லேடி கெட்டப்பில் வங்கியில் கொள்ளை - சமூக ஊடகங்களில் வைரலாகும் போட்டோஸ்!

Sinekadhara

தூம் - 2 திரைப்படத்தில் ஹிருத்தின் ரோஷன் விதவிதமான கெட்டப்பில் வந்து கொள்ளையடிப்பார். அதேபோல் டிப்டாப் ஓல்டு லேடி கெட்டப்பில் வந்து பேங்கில் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் போலீசாரையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்கிழக்கு அட்லாண்டாவில் உள்ள ஹென்றி கவுண்டி பகுதியில் திங்கட்கிழமை இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பதாக மெக்டோனாக் போலீசார் சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளனர். 6 அடி உயரம், மெலிந்த தேகம், பூபோட்ட உடை, வெள்ளை ஷூ, ஆரஞ்சு க்ளவுஸ், தலையில் வெள்ளைநிற விக், முகம் மற்றும் கழுத்தில் கறுப்புநிற மாஸ்க் என தோற்றமளிக்கிறார் அந்த மர்ம நபர்.

ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மெக்டோனக் நகரிலுள்ள சேஸ் வங்கிக்குள் நுழைந்த அந்த மர்ம நபர், வங்கி ஊழியர் ஒருவரிடம் குறிப்புச்சீட்டு ஒன்றை கொடுத்ததாகவும், அந்த குறிப்பில் குறிப்பிட்ட தொகையை கொடுக்குமாறும், இல்லாவிட்டால் தன்னிடம் துப்பாக்கி உள்ளது எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பணத்தை பெற்றுக்கொண்டபின், பதிவு செய்யப்படாத வெள்ளைநிற காரில் ஏறி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வயதான பெண்போல் வேடமிட்டிருந்த அந்த நபரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

இதேபோல் கடந்த மேம் மாதம் பாரிஸிலுள்ள லோர்வ் அருங்காட்சியகத்தில் வயதான பெண்மணி போல் வேடமணிந்த ஒருவர் சக்கர நாற்காலியிலிருந்து தாவி எழுந்து மோனலிசா ஓவியத்தின்மேல் கேக்கை தடவ முற்பட்டது குறிப்பிடத்தக்கது.