உலகம்

ஸ்மார்ட்ஃபோன் வெடித்து அதிகாரி பரிதாப பலி!

webteam

ஸ்மார்ட்ஃபோன் வெடித்து தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்ரின் ஹாசன். இவர் பிளாக்பெர்ரி மற்றும் ஹூவேய் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார். அதை தனது படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார். திடீரென ஃபோன் வெடித்து சிதறியது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து படுக்கையில் தீப்பற்றி எரிந்தது. 

இதுபற்றி அவரது உறவினர்கள் கூறும்போது, ’படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் போட்டிருந்தார். அது வெடித்து அவர் மண்டையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். அதன்பின் அவரது படுக்கையில் தீப் பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடிக்கும் முன்பே அவர் இறந்துவிட்டதால் அவரால் வெளியேற முடியவில்லை. அவரிடம் இரண்டு போன் இருந்தது. எந்த போன் வெடித்தது என்று தெரியவில்லை’ என்று தெரிவித்தனர்.

இதனிடையே கிராடில் பண்ட் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நஸ்ரினுக்கு அருகில் சார்ஜ் போடப்பட்டு இருந்த ஸ்மார்ட்ஃபோன் வெடித்து சிதறிது. இதில் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.