உலகம்

ஒரே நேரத்தில் இத்தனை டீசர்ட்டா? கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

ஒரே நேரத்தில் இத்தனை டீசர்ட்டா? கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

webteam

கின்னஸ் உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனம், சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை எல்லாம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. எத்தனை டீசர்ட்டு ஒரே நேரத்தில் அணியமுடியும் என்பதை அந்த மனிதர் முறியடித்துவிட்டார். 

கின்னஸ் உலக சாதனையின் சாதனை வீடியோக்கள், ஓ மை காட் என்றும் வாவ் என்றுதான் மனிதர்களை ஆச்சரியப்பட வைக்கும் சில நாட்களுக்கு முன்பு , ஒரு தீவிரமான கூடைப்பந்து சவால் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டு ஆச்சரியத்தை உண்டாக்கியது. தற்போது ஒரு அசாதரணமான முற்றிலும் பொழுதுபோக்கான வீடியோவை வெளியிட்டு உலகையே ஓ போட வைத்துவிட்டனர் கின்னஸ் உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனத்தினர்.

டெட் காஸ்டிங்ஸ் என்பவர் ஒரே நேரத்தில் எத்தனை டீ சர்ட்டுகளை அணிந்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அவர் அணிந்த டீ சர்ட்டுகளின் எண்ணிக்கை 260. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியைத்தான் அவர்கள் வீடியோ வெளியிட்டுப் பகிர்ந்துள்ளனர். அதில் அவசர அவசரமாக  அவருக்கு டீ சர்ட் அணிந்துவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது ரசனையாக இருக்கிறது. 

தன் குழந்தைகளுடன் 2019 கின்னஸ் உலக சாதனைகளைப் பார்த்த பின்தான் இந்த ஐடியா டெட்டுக்கு வந்தது. அவருடைய இளைய மகன்தான் இந்த சாதனையைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளான். இதன் மூலம் கடின உழைப்பு, பொறுப்புணர்வைப் பற்றிய முக்கியமான பாடங்களை தன் குழந்தைகளுக்குச் சொல்லியிருப்பதாக டெட் குறிப்பிட்டதாக கின்னஸ் தெரிவித்துள்ளது.

இந்த சாதனை வீடியோவுக்கு 34 ஆயிரம் லைக்ஸ் வந்திருக்கிறது. எத்தனையோ பேர் பாராட்டுகளையும் குவித்துவருகின்றனர்.