உலகம்

மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது

மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது

Rasus

மலக்குடலில் மறைத்து வைத்து இந்தியாவுக்கு தங்க நகைகளை கடத்த முயன்றவரை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கொழும்பு விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அவர் நடந்து வந்ததை கண்ட அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதித்தனர். பின்னர் உடல் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டதில் மலக்குடலில் ஒரு கிலோ எடைக் கொண்ட தங்க நகைகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த அந்த நபரையும் கைது செய்தனர்.

கடந்த வாரம் இதேபோல் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.