அரசியல் எதிரிகளை பழிவாங்க தன் அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் தவறாக பயன்படுத்துவதாக நியூயார்க் மேயர் தேர்தலில ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள ஜோரன் மம்தனி குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கைது செய்து குடியுரிமையை பறித்து நாடு கடத்துவதாக ட்ரம்ப் மிரட்டுவதாகவும் ஆனால் அந்த அச்சுறுத்தலுக்கு பணியமாட்டேன் என்றும் மம்தனி கூறியுள்ளார். தான் எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் அரசின் சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளையே தடுக்க முனைவதாகவும் ஜோரன் மம்தனி கூறியுள்ளார்.
உகாண்டா நாட்டில் வசித்த இந்திய வம்சாளியினருக்கு பிறந்தவரான ஜோரன் மம்தனி நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடுவது ட்ரம்ப்புக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான ஜோரன் மம்தனி அண்மைக்காலமாக அமெரிக்க அரசியலில் வேகமாக எழுச்சி பெற்று வருகிறார். இவரது குடியுரிமையை பறித்து நாட்டை விட்டு வெளியே அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.