பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு லண்டன் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியோடினார். அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அவர், இந்தியாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மல்லையாவிற்கு இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு குறித்து லண்டன் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.