சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுல்லா யாமீன் ரூ10.70 கோடி அரசு பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாலத்தீவு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, யாமீனை கைது செய்து, சிறையிலடைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
அப்துல்லா யாமீனும், நீதித்துறை அமைச்சர் அஜிமா ஷாகூரும் மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாலத்தீவு போலீசார் தெரிவித்துள்ளார். அதேபோல், பல்வேறு நாடுகளில் யாமீன் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை கண்டுபிடிக்க சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியுள்ளதாக மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
2013ல் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற யாமீன், எதிர்க்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாமீன் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த சில மாதங்களில் அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டை தற்போதைய அரசாங்கம் முன் வைத்துள்ளது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களை யாமீன் மறுத்து வருகிறார்.