உலகம்

மலாலா யூசுப்சாய்க்கு கனடா அளித்த கௌரவ குடியுரிமை

Rasus

நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்க்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியுள்ளது. மலாலா யூசுப்சாய் கௌரவ கனடிய குடியுரிமை பெறும் ஆறாவது நபர்.

தற்போது 19 வயதாகும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய், தனது 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். மிக இளம் வயதில் நோபல் பரிசை பெற்றவர் என்ற பெருமை இவரை சாரும். இவர் ஐ.நா. சபையின் அமைதிக்கான தூதுவராகவும் உள்ளார்.

பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா பாகிஸ்தானில் தாலிபானுக்கு எதிராக போராடியவர். தாலிபான்கள் அவரை சுட்டுக் கொல்லவும் முயற்சித்தனர்.

கல்வி உரிமையை இழந்த பல பெண்களின் குரலாக மலாலா இருப்பதாகவும் அவரது கதை அனைவருக்கும் உத்வேகம் அளிக்க கூடியதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ மலாலா யூசுப்சாயை புகழ்ந்துள்ளார்.