நைஜீரியாவில், கல்விக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் வலியுறுத்தியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் மேற்கு ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ளார். மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில், ஒன்றான நைஜீரியாவில், பள்ளிக்குச் செல்லாத சுமார் ஒரு கோடி குழந்தைகள் உள்ளனர். இந்த நாடுகளில், கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, மலாலா யூசஃப் சாய் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் அபுஜாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நைஜீரியாவில் கல்விக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வி மேம்பாட்டிற்காக நைஜீரியாவில் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் மலாலா யூசஃப்சாய் வலியுறுத்தியுள்ளார்.