உலகம்

ஜெர்மனி தேர்தலில் வென்றுவிட்டதாக பிரதான எதிர்க்கட்சி அறிவிப்பு

Veeramani

ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார்.

ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இ்டதுசாாி சோஷலிச ஜனநாயக கட்சி 25 புள்ளி 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகின. பதவி விலகும் பிரதமர் ஆங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24 புள்ளி ஒரு சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

இதுபோன்ற சூழலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியான இடதுசாரி சோஷலிச ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். ஆகவே, ஆங்கெலா மெர்கல் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ஸ்கோல்ஸ் வலியுறுத்தி உள்ளார். கிரீன்ஸ், எஃப்டிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் ஒலாஃப் ஸ்கோல்ஸ் கூறியிருக்கிறார்.