நிலநடுக்கம் Unsplash
உலகம்

பப்புவா நியூ கினி நாட்டை உலுக்கிய பூகம்பம் - அச்சத்தில் மக்கள்

பப்புவா நியூ கினி நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.1 புள்ளியாக பதிவாகியுள்ளது.

Snehatara

பப்புவா நியூ கினி நாட்டில் அதிகாலை 4 மணியளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவான பூகம்பத்தால் சாலைகள் பிளந்தன. அண்டை நாடான இந்தோனேசியாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில், பப்புவா நியூ கினியின் கடலோரப் பகுதியில் கடலுக்கடியில்பூகம்பத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வராத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

earth quake