பாலியல் வன்கொடுமை புதியதலைமுறை
உலகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற நபர்.. ஆண்மைநீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மடகாஸ்கரில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்ற குற்றவாளிக்கு, அறுவைச்சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு, மடகாஸ்கர். இதன் தலைநகர் அன்டனனரிவோவிலிருந்து 30 கி.மீ மேற்கே உள்ள தொலைவில் இமெரிண்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது. இங்கு 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்ற குற்றவாளிக்கு, அறுவைச்சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் நடிடியர் ரசாபின்ட்ரலாம்போ, "இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், கடுமையான வேலைகளுடன் ஆண்மை நீக்க தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இஃது ஓர் எச்சரிக்கை" என அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அந்நாட்டில், கடந்த ஆண்டு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வழக்குகளுக்கு, இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. செக் குடியரசு மற்றும் ஜெர்மனியில் சில பாலியல் குற்றவாளிகளுக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறார்களுக்கு எதிரான சில பாலியல் குற்றங்களுக்கு நடைமுறையை கட்டாயமாக்கிய முதல் அமெரிக்க மாநிலமாக லூசியானா ஆனது. பல அமெரிக்க மாநிலங்களிலும், போலந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பாலியல் குற்றங்களுக்கு தண்டனையாக, தொடர்ச்சியான மருந்துகள் மற்றும் மீளக்கூடிய மருந்துகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வேதியியல் ஆண்மை நீக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் அதன் பயன்பாட்டை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இருப்பினும் மனித உரிமை அமைப்புகள் இந்த இரு நடைமுறைகளையும் விமர்சித்துள்ளன.