அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட், தன்னுடைய ஜீவனாம்சமான அமேசான் பங்குகளில் இருந்து 1.7 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஒற்றுமை, ஓரின சேர்க்கையாளர்கள் உரிமை, பொது சுகாதாரம், பருவநிலை மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கு இந்த நன்கொடையை இவர் வழங்கியுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெக்கன்ஸியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். இவருக்கு ஜீவனாம்சமாக அமேசான் நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 4 சதவீத பங்கினை வழங்கினார் பெசோஸ். கடந்த ஆண்டு 36 பில்லியன் டாலராக இருந்த மெக்கன்ஸியின் பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டு 60 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
“இந்த ஆண்டின் முதல் பாதி நொறுங்கிய இதயத்துடனே நகர்ந்தது. இனிவரும் என் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த உதவியினை செய்துள்ளேன். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தீர்வினை வழங்கும் அமைப்புகளுக்கு இந்த பணம் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் மெக்கன்ஸி ஸ்காட்