உலகம்

நுரையீரல் கடும் சேதம், உறுப்புகளில் உறையும் ரத்தம் : கொரோனா மரணத்தில் புதிய தகவல்

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலை பிரதே பரிசோதனை செய்து புதிய தகவல்களை இங்கிலாந்து கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மூழ்கியுள்ளனர். மனித இனத்திற்கு சவாலாக அமைந்துள்ள இந்த கொரோனா வைரஸை முழுமையாக ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இதற்காக தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸால் இறந்த 10 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இதில் அவர்களின் நுரையீரல் கடும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி உயிரிழந்த அனைவரது உடல்களிலும் இதயம், நுரையீரல் அல்லது சிறுநீரகம் என ஏதேனும் ஒரு முக்கிய உறுப்பில் ரத்தம் உறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.