ரஷ்யாவில் லாரி மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி படுகாயம் அடைந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரஷ்ய சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட தயாரான நிலையில் மேலே எழ முயன்றது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த காட்சியை அருகிலிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.