லண்டனில் மனித மாமிசம் விற்கப்படுவதாக ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்ட புரளியால் இந்திய உணவகம் ஒன்று மூடப்பட்டதாக, லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனின் தென்கிழக்கு பகுதியில், ‘கரி ட்விஸ்ட்’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஷின்ரா பேகம்.
இந்த நிலையில் கரி ட்விஸ்ட் உணவு விடுதியில் மனித மாமிசம் விற்கப்படுவதாக புரளி பரவியதால், ஷின்ரா பேகம் தனது விடுதியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஷின்ரா பேகம், “கரி ட்விஸ்ட் உணவு விடுதியில் மனித மாமிசம் விற்கப்படுவதாக ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்ட புரளியால், பொதுமக்கள் பலர் எங்கள் உணவு விடுதியை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததுடன், போலீசிலும் புகார் செய்துள்ளனர். நாங்கள் 60 வருடமாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். பொய்ப் புரளியால் வியாபாரத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்