உலகம்

குறைந்த அளவு ஹெச்.1பி விசா: அமெரிக்கா ஒப்புதல்

குறைந்த அளவு ஹெச்.1பி விசா: அமெரிக்கா ஒப்புதல்

Rasus

டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட 7 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா குறைந்த அளவிலான ஹெச்1.பி.
விசாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் ஹெச்.1.பி விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்தார். இதனால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் தங்கி பயில்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும்
பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 7 நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்த அளவிலான
விசாக்களுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
அதாவது, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 2,040 விசாவும் விப்ரோ நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை விட, 52 சதவிகித விசாவுக்கும்
இன்போசிஸ் நிறுவனத்துக்கு 16 சதவிகித விசாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.