உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் முதன்மையான ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய செயலிகளின் வீடியோ சேவைக்கு அந்நாட்டு அரசு சேவை வரியாக இந்திய மதிப்பில் 14 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சித்ததால் போராட்டத்தில் மோதல் வெடித்தது. பொதுமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து சேவை வரி திட்டத்தை அரசு ரத்து செய்வதாக தெரிவித்தது.