உலகம்

ஐயையோ! ஆறாக ஓடுது எட்னா குழம்பு

ஐயையோ! ஆறாக ஓடுது எட்னா குழம்பு

webteam

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலையிலிருந்து லாவா குழம்பு பெருமளவில் வெளியேறி வருவதால் அந்த எரிமலையைச் சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படும் எட்னா எரிமலை, இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. இது 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த எரிமலை, கடந்த சில மாதங்களாக மாக்மா குழம்புகளை கக்கி வரும் நிலையில், தற்போது தீ குழம்புகள் ஆறாக ஓடும் காணொலி வெளியாகியுள்ளது.

சுமார் 3000 மீட்டர் பரப்பில், 650 அடி உயரத்தில் எட்னா எரிமலை தீக்குழம்புகளையும், புகையையும் கக்கி வருவதால், மலை பள்ளத்தாக்கில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் எட்னாவின் உயிர்ப்புத்தன்மை அதிகமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் மலையின் வெப்பநிலை தற்போது 1000 டிகிரி செல்சியஸ்-ஐ தண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.