உலகம்

கொரோனா கொடுமை: லத்தீன் அமெரிக்க நாடுகளில் இரண்டரை லட்சத்தைத் தொடும் உயிரிழப்புகள்

webteam

பிரேசில், பெரு, கொலம்பியா மற்றும் அர்ஜென்டினா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு இரண்டரை லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலகட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும்கூட, நோய் தொற்று குறையாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசில் நாட்டில் கொரோனா காரணமாக 1,204 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் புதிதாக 45, 323 பேர் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரு, கொலம்பியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக பெரு, அர்ஜென்டினா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதமும் சரிவை அடைந்துள்ளது.