உலகம்

லாஸ் வேகாஸ் தூப்பக்கிச்சூடு நினைவிடத்தில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி

லாஸ் வேகாஸ் தூப்பக்கிச்சூடு நினைவிடத்தில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி

webteam

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் துப்பாக்கி‌ச் சூடு நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ்வேகாஸின் நெவெடா பகுதியில் உயிரிழந்தவர்களுக்காக‌ நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்துக்கு திரண்டு வந்த ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி, பூங்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.