உலகின் மிகப் பெரிய அளவில் குழந்தைகளை பலி கொடுத்த சம்பவத்தை பெரு நாட்டு அகழ்வாராய்ச்சியினர் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பியாவில் வாழ்ந்த 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 200 லாமாக்களின் சடலங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்நாட்டு புவியியல் ஆய்வின் படி கொலம்பியாவில் வாழ்ந்த சிம்மு பகுதியில் குழந்தைகளை பலி கொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்த போது குழந்தைகளின் மார்பு எலும்பு பகுதியில் கீறல் இருப்பதாகவும் அதிலிருந்து இதயத்தை அகற்றியதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குழந்தைகள் வயது 6 முதல் 15 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.