கேரளா நிலச்சரிவு Pti
உலகம்

மீண்டும் வயநாட்டில் நிலச்சரிவு.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சி.. 2 பேர் உயிரிழப்பு!!

கேரள மாநிலம் வயநாடு கல்லாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

கேரளம் மாநிலம் வயநாடு அருகேயுள்ள கல்லாடி பகுதியில் சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே இடத்தில சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அதே இடத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் சுரங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..

இந்த நிலையில் தான் கல்லாடி பகுதியில் நேற்று பெய்த அதீத கனமழையால், சுரங்கம் தோண்டும் பணியின் போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அந்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மண்ணில் புதைந்து போவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில், 2 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் தேடுதல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தேடுதல் பணிகள் முடிவுற்ற பிறகே உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.