உலகம்

குர்கிஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: 92% மக்கள் ஆதரவு

குர்கிஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: 92% மக்கள் ஆதரவு

webteam

குர்கிஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பில் 92% மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் வசித்து வரும் குர்து இன மக்கள், தனிநாடு வேண்டும் என கடந்த 50 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, குர்து தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால் குர்கிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு, ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இஸ்ரேல் ஆதரவுடன் அங்கு தனிநாட்டிற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. 

இந்த சூழலில் வெளியாகியுள்ள பொதுவாக்கெடுப்பு முடிவுகளில் 2,861,000 மக்கள் தனிநாடு வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். 2,24,000 பேர் மட்டுமே தனிநாடு வேண்டாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு இறுதி நேரத்தில் ஈராக் அதிபர் ஹைதர் அல்-பாக்தாதி தடுக்க முயன்ற போதிலும், தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் குர்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து குர்து இனத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈராக் அரசு முடிவு செய்துள்ளதாகவும், எல்லை தொடர்பான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.